State Level Kickboxing Champions

டி ஜே எஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்.
மாநில அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஸ் 2025 மே மாதம் 9 .10 .11 தேதியில் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யூனிவர்சிட்டி வளாகத்தில் நடைபெற்றது .இதில் டி .ஜே. எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக மாணவர்கள் கலந்து கொண்டு பி.பி .தருண் மாநில அளவில் முதலிடமும் எல் . அசரப் அலி இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்து, இதில் முதலிடம் பெற்ற பி.பி. தருண் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் . கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் , டி .ஜே. எஸ் கல்வி குழுமத்தின் தலைவரும் , கல்வி நெறி காவலர் திருவாளர் டி. ஜே கோவிந்தராஜன் அவர்கள் பாராட்டினார். பள்ளி தாளாளர் மருத்துவர் அ. பழனி மற்றும் முதல்வர் திரு.பா. ஞானப்பிரகாசம் மற்றும் ஆசிரியர்களும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.